கிருத்திகன் கவிதைகள்

Pages

01 September 2010

மிருகத்தைக்காக்கும் கடவுளின் அசரீரிகள்
சொற்கள் நனைந்திருந்த என் பாடலில்
பரிட்சியமற்ற எந்த வார்த்தைகளின்
உறுத்துதலிர்க்காக என்னை நீ
தண்டித்துக்கொண்டிருக்கிறாய்

குருதி வழியும் கால்களிற்க்காக
என் சுவடுகளை அந்நியப்படுத்தும் நீ
களைத்திருந்த என் குரல்வளையினை கீறுவதால்
பலவீனம் மிகுந்திருந்த எனை விலங்கிடுவதால்
துளிர்க்கும் உன் வீரத்தை யாரோடு பகிரப்போகின்றாய்

நினைவு கனத்த பாடலிற்க்காக
எனை விலங்கிடும் உன்னை
அதிகாரப்படுத்தும் அகலம் நிறைந்த
சுவடுகள் கொண்ட உன்னை
சகிக்க முடியாத கொடூரம் நிறைந்த
குழந்தைகள் வீரிடும் முகம் கொண்ட உன்னை
உன்னை மட்டும்
எப்படி கடவுளின் அசரீரிகள் இன்னமும்
காத்துக்கொண்டே இருக்கின்றன

2 comments:

  1. அசரீரிகள் என்றிருக்க வேண்டுமோ?

    ReplyDelete
  2. அப்படித்தான் வந்திருக்க வேண்டும். தட்டச்சு செய்யும் போது கவனிக்கவில்லை. தவறுக்கு மன்னிக்கவும் பத்மா அக்கா ..

    ReplyDelete