கிருத்திகன் கவிதைகள்

Pages

28 August 2010

வலி பூசிய சொற்கள்
மிருகத்துடன் உறங்கிகொண்டிருக்கும்
நடு இரவுகளை விடவும்
கொடுமை மிகுந்த,
கறை படிந்த வன்மத்தை உதிர்க்கும்
வலி பூசிய சொற்களை
அவனிற்கு கொடுத்திருந்தார்கள்

வானம் உடைந்த கதைகளை கூறியவனின்
கொடூரம் நிறைந்த குரல் வளைக்குள்
ஒரு அடிமையின் தருணங்கள்,
உன் நண்பனின் துயர் மிகு பொழுதுகள் ,
அகப்பட்டு துடிப்பதை
நீ எப்படி தாங்கிக்கொள்ள போகின்றாய்

மரணம் பற்றியும்
ஓலம் பற்றியும் பிதற்றிகொள்ளும்
அவன்
நாம் விரும்பிக்களித்த
தித்திப்பின் தருணங்களை மட்டுமேன்
நம்ப மறுக்கின்றான்

கனவுகளிற்க்காய்
விழித்திருந்த உன்னை
உறங்கிக்கொள்வதாய் கூறும்
அவன் அதைரிய வார்த்தைகளை
எனைப்போலவே
நீயும் நம்பிவிடாதே நண்பா


(நண்பன் ஜெயராஜ் இறப்பு பற்றி தொலைபேசி வழி அறிந்தபோது)

5 comments:

 1. நல்லாயிருக்கு நண்பரே..
  Please remove Word verification..

  ReplyDelete
 2. வலி வழிகிறது கவிதையெங்கும் ..
  அனுதாபங்கள்

  ReplyDelete
 3. நன்றி தோழர் வெறும்பய , மற்றும் பத்மா அக்கா..

  ReplyDelete
 4. வருகைக்கு நன்றி ulavu.com

  ReplyDelete